அரசியலில் விஜய்க்கு தான் என் ஆதரவு ; சின்னத்திரை நயன்தாரா
அரசியலில் விஜய்க்கு தான் என் ஆதரவு சின்னத்திரை நயன்தாரா என கூறப்படும் வாணி போஜன் தெரிவித்துள்ளார்.
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி தற்போது தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலை கூட்டணி எதுவும் இல்லாமல் தனியாக எதிர்கொள்கிறார். அரசியலில் நுழைந்ததால் இனி படங்களில் நடிக்கமாட்டேன் என அவர் அறிவித்துவிட்டார்.

நான் விஜய் சாருக்கு support செய்கிறேன்
இந்நிலையில் விஜய் சென்னை பெரம்பூர் தொகுதியில் தான் போட்டியிடப்போகிறார் என தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் ஒரு படத்தின் விழாவில் நடிகை வாணி போஜனிடம் விஜய் கட்சிக்கு பிரச்சாரம் செய்வீர்களா என கேள்வி கேட்கப்பட்டு இருக்கிறது. அதற்கு அவர், "நான் இதை பலமுறை கூறிவிட்டேன். எனக்கு விஜய் சார் ரொம்ப பிடிக்கும்.
அவர் அரசியலுக்கு வருவது எனக்கு ரொம்ப ரொம்ப சந்தோசம்." "எப்போது TVK-வில் சேர போறீங்க என பலரும் என்னிடம் கேட்கிறார்கள். ஐடியா இருக்கு, ஆனால் அதை பிறகு சொல்கிறேன். ஆமாம், நான் விஜய் சாருக்கு support செய்கிறேன்" என வாணி போஜன் வெளிப்படையாகவே கூறிவிட்டார்.