பஸ் சாரதிகள், விற்பனை நிலையங்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை!
மேல் மாகாணத்தில் சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்றாத பஸ் சாரதிகள், விற்பனை நிலையங்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
அதன்படி பயணிகள் பஸ்களின் சாரதிகள் 382 பேர் மற்றும் 89 குளிரூட்டப்பட்ட பஸ்களின் சாரதிகளுக்கு இவ்வாறு எச்சரிக்கப்பட்டுள்ளனர். அதேவேளை சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்றாத 573 விற்பனையாளர்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட் டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.
மேல் மாகாணத்தை மையமாகக் கொண்ட இந்தச் சுற்றிவளைப்பு நேற்று பிற்பகல் 2.00 மணி முதல் 4.00 மணி வரை இடம்பெற்றது.
இதற்காக சுமார் 435 பொலிஸார் சேவையில் இணைத்துக்கொள்ளப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்போது 987 பயணிகள் பஸ்கள், 223 குளிரூட்டப்பட்ட பஸ்கள் மற்றும் 1366 விற்பனை நிலையங்களும் பொலிஸாரால் சோதனை செய்யப்பட்டன.