இணைய நிதி மோசடிகள் குறித்து பொலிஸார் எச்சரிக்கை
சமூக ஊடகங்கள் மற்றும் இணையத்தளங்கள் ஊடாக இடம்பெறும் நிதி மோசடிகள் குறித்து பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு பொலிஸ் ஊடகப் பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது.
டெலிகிராம், வட்ஸ்அப் உள்ளிட்ட சமூக ஊடகங்களை பயன்படுத்தி போலி லொத்தர், உடனடி கடன், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் உயர்கல்வி வாய்ப்புகள் எனக் கூறி மோசடிகள் இடம்பெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அறிமுகமில்லாத இணைப்புகளை கிளிக் செய்வது, பலவீனமான கடவுச்சொற்களை பயன்படுத்துவது மற்றும் தனிப்பட்ட வங்கி தகவல்களை பகிர்வது போன்றவற்றை தவிர்க்குமாறும் பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இவ்வாறான மோசடிகள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும், சந்தேகத்துக்கிடமான சம்பவங்களை உடனடியாக பொலிஸாருக்கு அறிவிக்குமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.