யாழில் தியாக தீபம் திலீபன் நிகழ்வில் குழப்பம் விளைவிக்க முயன்ற பொலிசார்
யாழ்ப்பாணம் நல்லூரின் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாது மக்களௌக்காய் தன்னுயிரை ஆகுதியாக்கிய தியாக தீபத்தின் நினைவிடத்தில் 36 ஆம் ஆண்டு நினைவங்சலியை மக்கள் செலுத்திக்கொண்டு இருந்தனர்.
இதனால் அவ்வீதி ஊடான போக்குவரத்தினை மாற்று வீதி வழியாக மாற்றி போக்குவரத்து ஒழுங்குகளை அங்கிருந்த சிலர் மேற்கொண்ட நிலையில், அவர்களை பொலிஸார் மிரட்டி அஞ்சலி நிகழ்வு இடம்பெறும் இடத்தின் ஊடாக வாகனங்களை செல்ல அனுமதித்தனர்.
குழப்பம் விளைவிக்க முயன்ற பொலிஸார்
அத்துடன் தாமும் பொலிஸ் வாகனத்தில் அஞ்சலி நிகழ்வு இடம்பெறும் பகுதியில் சுற்றி திரிந்து நிகழ்வுகளில் குழப்பங்களை ஏற்படுத்த முயற்சித்ததுடன் , மக்கள் நெரிசல் காணப்பட்ட இடத்தினால் வாகனத்தை செலுத்தி மக்கள் மத்தியில் பயத்தினை ஏற்படுத்த முயன்றனர்.
எனினும் பெரும்பாலான சாரதிகள் தாங்களாகவே அஞ்சலி நிகழ்வு இடம்பெறும் வீதியை தவிர்த்து மற்றைய வீதி வழியாக தமது பயணத்தை மேற்கொண்டனர்.
தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வின் இறுதி நாளான இன்று யாழ்ப்பாணம் – பருத்தித்துறை வீதியில் நல்லூர் ஆலயத்திற்கு அருகில் உள்ள திலீபனின் நினைவிடத்தில் நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று இடம்பெற்றது.
அதேவேளை தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலை தடை செய்யுமாறு பொலிஸார் தாக்கல் செய்த வழக்கை யாழ் நீதிமன்றம் நிராகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.