யாழில் பெண் ஒருவரை அச்சுறுத்தி பணம் பறித்த பொலிஸார்!
யாழ்ப்பாணம் - பொன்னாலை மேற்கில் குழாய்க்கிணறு வெட்டிய பெண் தலைமைத்துவக் குடும்பம் ஒன்ற்னை அச்சுறுத்து பொலிஸார் பணம் பெற்ற சம்பவம் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.
கிண்று வெட்ட அனுமதி பெற்றுக்கொள்ளவில்லை என கூறி பொலிஸார் 8 ஆயிரம் ரூபா பணத்தை இலஞ்சமாகப் பெற்றுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. குறித்த சம்பவம், தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
பணம் பறிக்கும் பொலிஸார்
பாதிக்கப்பட்ட குடும்பத்தில் தற்போது க.பொ.த உயர்தரத்தில் கற்றுக்கொண்டிருக்கும் மாணவன், பகுதி நேர தொழிலுக்குச் சென்று சேகரித்த பணத்தில் குழாய்க் கிணறு ஒன்றை வெட்டியுள்ளனர்.
குழாய்க் கிணறு வெட்டிக்கொண்டிருந்தபோது முச்சக்கரவண்டி ஒன்றில் சென்ற பொலிஸார், அனுமதி பெறாமல் குழாய்க்கிணறு வெட்டுவதாக தங்களுக்கு முறைப்பாடு கிடைத்துள்ளது எனக் கூறியுளனர்.
அத்தோடு கிணறு வெட்டுவதற்காக வந்தவர்களின் கருவிகளைக் கொண்டுசெல்லப்போவதாக மிரட்டி பணம் தந்தால் எதுவும் செய்யாமல் விட்டுச் செல்வதாக குறித்த குடும்பத்தினரை அச்சுறுத்தியுள்ளனர்.
செய்வதறியாது திகைத்து நின்ற மேற்படிக் குடும்பம் அனுமதி பெறவேண்டும் என்ற விடயம் தமக்கு தெரியாது எனவும் தமது கஸ்ட நிலையையும் பொலிஸாருக்கு எடுத்துக் கூறினர்.
அவர்களின் கருத்தைச் செவிமடுக்காத பொலிஸார் 8 ஆயிரம் ரூபா பணத்தைப் பறித்துக்கொண்டு சென்றதாக கூறப்படுகின்றது.
இந்நிலையில் சட்டம் ஒழுங்கை பேண் வெண்டிய பொலிஸார், இவ்வாறு வறுமையில் வாடும் குடும்பத்திடம் பணம் பறித்துசென்ற சம்பவம் சினத்தை ஏற்படுத்தியுள்ளது.