கிரீன் சேனல் வழியாக வெளியேற முயன்ற பெண் ; சிக்கிய பொருட்கள்
சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் “கிரீன் சேனல்” வழியாக கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து வெளியேற முயன்ற பெண் பயணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இன்று (19) அதிகாலையில் விமான நிலைய சுங்க அதிகாரிகள் குழுவினரால் இந்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபரிடமிருந்து சுமார் 354,000 ரூபாய் பெறுமதியான சிகரெட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இன்று அதிகாலை 12.45 மணிக்கு துபாயிலிருந்து ஃப்ளை துபாய் FZ-569 விமானத்தினூடாக அவர் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
அவரிடமிருந்து 23,600 “பிளாட்டினம்” சிகரெட்டுகள் அடங்கிய 118 அட்டைப்பெட்டிகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். கைதான பெண் பண்டாரவளை பகுதியைச் சேர்ந்த 49 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளில் கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.