கொள்ளைக்காரர்களிடம் இலஞ்சம் வாங்கும் பொலிஸார்! புத்தளம் மக்கள் விசனம்
புத்தளத்தில் மணல் அகழ்வில் ஈடுபடும் கொள்ளைக்காரர்களிடம், பொலிஸார் இலஞ்சத்தைப் பெற்று அவர்களை விடுவிப்பதாக அப்பகுதி மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.
பல நாட்களாக புத்தளம் – வேப்பமடு பகுதியில் உள்ள குளத்தில், சட்டவிரோதமாக அனுமதிப் பத்திரமின்றி கொள்ளக்காரர்களினால் மணல் அகழ்வு இடம்பெற்று வருகின்றது.

இவ்வாறான நடவடிக்கையால் பாரிய இயற்கை அழிவு ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றம் சுமத்துகின்றனர். குறித்த பகுதியில், மணல் அகழ்வில் ஈடுப்பட்டுள்ளதால் அப்பகுதியிலுள்ள குளத்தில் ஆழம் ஏற்பட்டுள்ளதாகவும், குளம் உடைந்துள்ளதாகவும், மக்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் இதுகுறித்து பொலிஸாருக்கு தகவல் வழங்கினால், மணல் கொள்ளைக்காரர்களை கைது செய்து, அவர்களிடம் இலஞ்சத்தைப் பெற்றுவிட்டு விடுவிப்பதாகவும் மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

இந்நிலையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, (Gotabaya Rajapaksa) பிரமதர் மஹிந்த ராஜபக்ஷ (Mahinda Rajapaksa) உட்பட பல அதிகாரிகளுக்கு கடிதம் மூலம் முறைப்பாடு செய்திருந்தோம். எனினும், இதுவரையில் மணல் அகழ்வில் ஈடுபடுபவர்களைக் கைது செய்வதற்கோ மணல் அகழ்வை தடுத்து நிறுத்துவதற்கோ எந்தவித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.
இதனால் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபடுவர்களை கைது செய்யப்பட வேண்டுமென்றும், சட்டவிரோத மணல் அகழ்வு தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்றும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இவ்வாறான சட்டவிரோத நடவடிக்களை தடுத்து நிறுத்தினால் இயற்கை வளங்களை அழிவுகளிலிருந்து பாதுகாக்க முடிமென மேலும் மக்கள் தெரிவிக்கின்றனர்.