சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடியவருக்கு பொலிஸார் காட்டிய அதிரடி
கொழும்பு, மட்டக்குளிய - சமித்புர பகுதியில் நேற்று (03) நடத்தப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போது, ஒரு கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியான ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருட்களுடன் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடிய நபரொருவரை சோதனையிட்ட போதே, அவரது பயணப்பையிலிருந்து போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

மேலதிக விசாரணை
கைது செய்யப்பட்ட நபரிடமிருந்து 1 கிலோகிராம் 40 கிராம் ஐஸ் போதைப்பொருள், 351 கிராம் ஹெரோயின், இரண்டு டிஜிட்டல் தராசுகள், போதைப்பொருளைக் கலப்பதற்குப் பயன்படுத்தப்பட்ட இரண்டு கரண்டிகள் மற்றும் கைத்தொலைபேசி என்பன கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மட்டக்குளிய காவல்துறை பிரிவின் ஊழல் ஒழிப்புப் பிரிவினரால் இந்தச் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
700 ஆண்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட 13 வயது சிறுமி ; நாய் கூண்டுகளில் அடைக்கப்பட்ட பலர் ; உலகை அதிர வைத்த தகவல்
அத்துடன், இந்தச் சந்தேகநபருக்குப் பின்னணியில் இயங்கி வரும் பாரிய போதைப்பொருள் கடத்தல் குறித்து மட்டக்குளிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கிப்படுகின்றது.