காவல்துறை விசேட அதிரடிப்படையினரின் திடீர் சோதனையில் ஒருவர் கைது
மாத்தறை வெலிகம, இப்பாவல பகுதியில் 03 T-56 துப்பாக்கிகள் மற்றும் மற்றொரு துப்பாக்கியின் பாகங்கள், 27 தோட்டாக்கள் மற்றும் 1 மெகசின் ஆகியவற்றுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை விசேட அதிரடிப்படை (STF) தெரிவித்துள்ளது.
STF அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய தகவலின்படி, வெலிகம, இப்பாவல பகுதியில் உள்ள ஒரு வீட்டை அதிகாரிகள் சோதனை செய்துள்ளனர்.
இதன்போது, கட்டுமானத்தில் உள்ள இரண்டு மாடி வீட்டின் மேல் தளத்தை ஆய்வு செய்தபோது, 03 T-56 துப்பாக்கிகள், 01 மெகசின் மற்றும் 27 தோட்டாக்கள் மற்றும் ஒரு துப்பாக்கியின் பாகங்களை என்பன கண்டுப்பிடிக்கப்பட்டன.
இதன்போது கைது செய்யப்பட்ட சந்தேகநபர் சுமார் 38 வயதுடையவர் எனவும், அவர் தச்சு தொழிலில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.
இந்த சந்தேகநபர் தற்போது பூஸா உயர் பாதுகாப்பு சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றம் மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரரான ஜெயசேகர விதானகே ருவான் சாமர (மிதிகம ருவான்) என்பவரின் உறவினர் என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பாக காவல்துறை விசேட அதிரடிப் படை நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.