கம்பஹாவில் முச்சக்கரவண்டி மீது துப்பாக்கிச்சூடு நடத்திய பொலிஸார்!
கம்பஹாவில் உத்தரவை மீறிச் சென்ற முச்சக்கரவண்டி மீது பொலிஸார் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பியகம ரணவிரு பகுதிக்கு அருகில் நடமாடும் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த பியகம பொலிஸார் குறித்த வீதியூடாக பயணித்த முச்சக்கரவண்டியை நிறுத்துமாறு உத்தரவித்துள்ளனர்.
இதன்போது, பொலிஸாரின் உத்தரவையும் மீறி முச்சக்கரவண்டி முன்னோக்கிச் சென்றதால், பொலிஸார் முச்சக்கரவண்டியின் சக்கரங்களை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர்.
இதன்போது, முச்சக்கரவண்டியின் பின்பகுதியில் இரு சக்கரங்கள் மீதும் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதால் அதில் இருந்த இருவர் தப்பிச் சென்றுள்ளதாக பியகம பொலிஸார் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், சுடப்பட்ட முச்சக்கரவண்டி பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது எனவும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பியகம பொலிஸார் முன்னெடு2த்து வருவதாகவும் கூறப்படுகிறது.