தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேகநபர் உயிரிழந்த சம்பவம்: பொலிஸ் சார்ஜன்ட் விளக்கமறியலில்
கொபெய்கனே பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேகநபர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரை நாளை (2) வரை விளக்கமறியலில் வைக்குமாறு நிகவெட்டிய நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
குறித்த சந்தேகநபர் பொலிஸ் அதிகாரி இன்று (1) நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கொபெய்கனே, பெத்தேகம பகுதியில் பல திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடையவர் எனக் கூறப்படும் நபர் ஒருவர், கடந்த ஒக்டோபர் 25 ஆம் திகதி மதியவேளையில் பிரதேசவாசிகளால் பிடிக்கப்பட்டு கொபெய்கனே பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தார்.
அதன்பின்னர் இரண்டு நாட்களாக அவர் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டிருந்ததுடன், கடந்த 27 ஆம் திகதி இரவில் திடீர் சுகவீனம் காரணமாக நிகவெட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அவர் உயிரிழந்தார்.