மாணவியை கண்டுபிடிக்க பொது மக்களிடம் உதவிகோரும் பொலிஸார்
மாத்தளை பிரதேசத்தில் கடந்த 2 மாத காலமாக காணாமல்போன பாடசாலை மாணவி ஒருவரை கண்டுபிடிக்க கந்தேநுவர பொலிஸார் பொதுமக்களிடம் உதவி கோரியுள்ளனர்.
மாத்தளை - கந்தேநுவர பிரதேசத்தைச் சேர்ந்த பாடசாலை மாணவி ஒருவர் கடந்த டிசம்பர் மாதம் 06 ஆம் திகதியிலிருந்து காணாமல்போயுள்ளதாக கந்தேநுவர பொலிஸ் நிலையத்திற்கு முறைப்பாடு ஒன்று கிடைத்துள்ளது.
இது தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார் காணாமல்போயுள்ள பாடசாலை மாணவியின் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
புகைப்படத்தில் உள்ள பாடசாலை மாணவி தொடர்பில் ஏதேனும் தகவல்கள் கிடைத்தால் கந்தேநுவர பொலிஸ் நிலையத்தின் 071 - 8592943 அல்லது 066 – 3060954 என்ற தொலைபேசி இலக்கங்களுக்குத் தொடர்பு கொள்ளுமாறு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.