கொலைச்சம்பவம் தொடர்பில் பொதுமக்களின் உதவிகோரும் பொலிஸார்
அம்பலாங்கொடை பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக தேடப்படும் சந்தேக நபரைக் கைது செய்ய பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.
கடந்த 2024 நவம்பர் மாதம் அம்பலாங்கொடை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட காலி – கொழும்பு பிரதான வீதியில் மோட்டார் சைக்கிளில் சென்ற இனந்தெரியாத இருவர் மற்றுமொரு மோட்டார் சைக்கிளில் பயணித்த பெண் உட்பட இருவரை துப்பாக்கியால் சுட்டுக் கொலைசெய்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றிருந்தனர்.

சந்தேக நபர் தொடர்பில் ஏதேனும் தகவல்கள்
சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார், இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரொருவரை அடையாளம் கண்டுள்ளனர்.
சந்தேக நபர் காலி, படபொல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் “வெல்லகே சமத்” என்பவர் தற்போது பிரதேசத்தை விட்டுத் தப்பிச் சென்று தலைமறைவாக இருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்நிலையில், சந்தேக நபரின் புகைப்படத்தை வெளியிட்டுள்ள பொலிஸார் , சந்தேக நபர் தொடர்பில் ஏதேனும் தகவல்கள் கிடைத்தால் கீழ் காணும் தொலைபேசி இலக்கங்களுக்குத் தொடர்புகொள்ளுமாறு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அம்பலாங்கொடை பொலிஸ் நிலையம் – 071 8591484
எல்பிட்டிய பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவு – 091 2291095
 
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                             
                             
                             
                             
                             
                             
                                             
         
     
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        