யாழில் உயிரிழந்த முல்லைத்தீவு நபர்; கொலைச் சம்பவம் தொடர்பில் மூவர் கைது
முல்லைத்தீவு முள்ளியவளை முறிப்பு பகுதியில் குடும்பஸ்தரை கொலை செய்த குற்றச்சாட்டில் மூவர் பொலிஸாரினால் நேற்றையதினம் (17) கைது செய்யப்பட்டுள்ளார்.
முல்லைத்தீவு முள்ளியவளை முறிப்பு பகுதியில் குடும்பஸ்தர் ஒருவருக்கும் ஒரு குழுவினருக்குமிடையில் கடந்த 13 ஆம் திகதி இடம்பெற்ற தகராறில் குடும்பஸ்தர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது (14) சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
முல்லைத்தீவு பொலிஸார் கைது
சம்பவத்துடன் தொடர்புடையதாக கருதப்படும் சந்தேகநபர்கள் மூவரை நேற்றையதினம் முல்லைத்தீவு பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட மூவரும் முறிப்பு பகுதியை சேர்ந்த 47,52, 21 வயதுடையவர்களாவார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முல்லைத்தீவு பொலிஸார் மேற்கொண்டு வருவதுடன் விசாரணையின் பின்னர் நீதிமன்றில் முற்படுத்தபடவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.