சந்தேகநபரை கண்டறிய பொதுமக்களின் உதவியை நாடியுள்ள பொலிஸார்
கொழும்பு கொஹுவலாவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வரும் சந்தேக நபரை கைது செய்வதற்காக காவல்துறை பொதுமக்களின் உதவியை நாடியுள்ளது.
கொஹுவல காவல் எல்லைக்குட்பட்ட போதியவத்த பகுதியில், மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு அடையாளம் தெரியாத நபர்கள் 16 வயது சிறுமியை காயப்படுத்திய சம்பவம் குறித்து காவல்துறை விசாரணைகளை முன்னெடுத்து வருகிறது.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களில் ஒருவரை அடையாளம் கண்டதையடுத்து, காவல்துறையின் ஓவியர் ஒருவரால் சந்தேக நபரின் உருவ ஓவியம் தயாரிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, குறித்த சந்தேக நபர் தொடர்பில் ஏதேனும் தகவல் உள்ளவர்கள் கீழ்வரும் தொலைபேசி எண்கள் மூலம் காவல்துறையுடன் தொடர்பு கொள்ளுமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தொலைபேசி எண் –
நிலைய அதிகாரி/ கொஹுவல காவல் நிலையம் 071-8591669
நிலைய அதிகாரி/ குற்றப் புலனாய்வுப் பிரிவு 071-4146727