பாரவூர்தியை சோதனையிட்ட பொலிஸார் ; அதிர்ச்சி கொடுத்த சந்தேக நபர்கள்
தங்காலை - குடாவெல்ல பகுதியில் 100 கிலோவுக்கும் அதிக நிறையுடைய ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப் பொருட்களுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சந்தேகநபர்கள் குடாவெல்ல மீன்பிடி துறைமுகத்திலிருந்து பாரவூர்தியொன்றில் இப் போதைப் பொருட்களை கடத்திச் செல்ல முயன்றுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
கைதுசெய்யப்பட்ட இருவரும் கிரிந்திவெல, வத்தேக பிரதேசங்களைச் சேர்ந்த 34 வயது மற்றும் 35 வயதானவர்கள் ஆவர்.
கடுவெல பிரதேசத்திலிருந்து மீன்களை ஏற்றிச் சென்ற பாரவூர்தி வாகனத்தில் சென்ற சந்தேகநபர்கள், மீண்டும் குடாவெல்ல பகுதியிலிருந்து போதைப் பொருட்களை ஏற்றிக்கொண்டு திரும்பும்போதே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
இச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.