இலங்கைக்கு கடத்தவிருந்த 50 கோடி மதிப்பிலான மர்ம பொருட்கள்!
இராமநாதபுரம் - திருப்புல்லாணி அருகே புளித்தோப்பு கடற்கரை பகுதியில் இருந்து இலங்கைக்கு கடத்துவதற்காக தடை செய்யப்பட்ட கடல் அட்டை மற்றும் சுறா மீன் துடுப்புகளை ஒரு நாட்டு படகில் ஏற்றி தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த நிலையில் பொலிஸார் அதனை பறிமுதல் செய்துள்ளனர்.
இதுகுறித்து மேலும் தெரியவருவது,
கியூ பிரிவு பொலிஸாருக்கு இன்று செவ்வாய்க்கிழமை (23-08-2022) காலை ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து அப்பகுதிக்கு விரைந்து சென்ற கியூ பிரிவு பொலிஸார் கடல் அட்டை மற்றும் சுறா மீன் துடுப்புகளை பறிமுதல் செய்து கடத்தலுக்கு பயன்படுத்திய ஒரு நாட்டுப் படகு மற்றும் அதில் தொடர்புடைய ஒருவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களின் சர்வதேச மதிப்பு 50 கோடி ரூபாய் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.