எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பொலிஸ் பாதுகாப்பு!
நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்படவுள்ளது.
எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மக்கள் வரிசையில் நிற்பதால் கலவரம் ஏற்படாமல் தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் பொலிஸ் மா அதிபர் உத்தரவிட்டுள்ளார்.
விவசாய நடவடிக்கைகளுக்கு தடையின்றி எரிபொருளை கொண்டுசெல்லும் நபர்களுக்கு முன்னுரிமை வழங்கவும், சுற்றுலா வாகனங்கள், தீயணைப்பு வாகனங்கள் மற்றும் அம்புலன்ஸ் களுக்கு எரிபொருள் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் விசேட சுற்று நிருப மொன்றை வெளியிட்டுள்ளார்.
அத்துடன் எரிபொருள் பெற வரிசையில் நிற்கும் போது, நெரிசல் முடியும் வரை பொலிஸ் உத்தியோகத்தர் கடமையில் ஈடுபடுத்தப்பட வேண்டும் என பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார்