காதலர் தின களியாட்டங்களில் பொலிசார் கடமையில்!
உலகளவில் இன்று காதலர் தினம் கொண்டாட்டப்பட்டுவரும் நிலையில் காதலர் தினத்தன்று சிறார்களையும் இளைஞர்களையும் குறிவைத்து சட்டவிரோத செயற்பாடுகள் தொடர்பில் பொலிசார் விழிப்புடன் இருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எஸ்.எஸ்.பி நிஹால் தல்துவா தெரிவித்தார்.
பார்ட்டிகளை ஏற்பாடு செய்வதற்கும், கலந்து கொள்வதற்கும் தடை இல்லை என்றாலும், கடந்த ஆண்டுகளின் அனுபவங்களின் அடிப்படையில், பொலிசார் உஷார் நிலையில் இருப்பதாகவும் அவர் கூறினார்.
அதன்படி முகநூல் போன்ற சமூக ஊடக தளங்கள் மூலம் ஏற்பாடு செய்யப்படும் பார்ட்டிகள் மற்றும் நிகழ்வுகளை சுற்றிவளைக்க காவல்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
அதேசமயம் “பார்ட்டிகளில் கலந்துகொள்வதற்கு எந்த தடையும் இல்லை. ஆனால் பங்கேற்பாளர்கள் போதைப் பொருட்களைப் பயன்படுத்துகிறார்களா என்பதைப் பார்க்க பொலிசார் பார்ட்டிகளில் சோதனை நடத்துவார்கள் என்றும் அவர் மேலும் தெரிவித்திருந்தார்.