பொலிஸ் அதிகாரிகளின் விருந்துபச்சாரங்கள் தொடர்பில் வெளியான விசேட அறிவிப்பு
எதிர்வரும் தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு பொலிஸ் அதிகாரிகள் மற்றும் வர்த்தகச் சங்கத்தினரிடமிருந்து நிதி நன்கொடைகளைப் பெற்று பொலிஸ் நிலையங்களில் விருந்துபசாரங்களை ஏற்பாடு செய்வதைத் தவிர்க்குமாறு சகல பொலிஸ் அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய இந்த அறிவுறுத்தலை விடுத்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
அதிகாரிகள் மற்றும் சிரேஷ்ட அதிகாரிகளைப் பாராட்டும் விதமாக அவர்களுக்கு பரிசுகள் வழங்கக் கூடாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறு வழங்கப்படும் பணத்தையோ அல்லது பரிசுகளையோ சிரேஷ்ட அதிகாரிகள் ஏற்கக்கூடாது.
இந்த அறிவுறுத்தல்களைப் பின்பற்றாத பட்சத்தில் ஒழுக்காற்று நடவடிக்கைகள் எடுக்கப்படும் என பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார்.