பாடசாலை மாணவியின் வாழ்வை சீரழித்த பொலிஸ் அதிகாரி ; பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்
புத்தல பொலிஸ் பிரிவின் எகொடவத்த ஒக்கம்பிட்டிய வீதியைச் சேர்ந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததற்காக ஒரு பொலிஸ் கான்ஸ்டபிள் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட நபர் மட்டக்களப்பு தலைமையக பொலிஸில் இணைக்கப்பட்ட ஒரு பொலிஸ் கான்ஸ்டபிள் ஆவார்.
விழிப்புணர்வு நிகழ்ச்சி திட்டம்
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
பாடசாலை குழந்தைகள் மீதான பாலியல் துன்புறுத்தல் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி திட்டம் சிறுமி கல்வி பயிலும் பாடசாலையில் நடத்தப்பட்டது. அதன்பின்னர் அந்த சிறுமி தனது தாயாரிடம் தனக்கு நேர்ந்ததை தெரிவித்தார்.
இது தொடர்பில் தாயார், புத்தல பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தார். ஒரு நாள் பாடசாலை முடிந்ததும், பிரத்தியேக வகுப்புக்குச் சென்ற சிறுமி, தனது நண்பியின் வீட்டுக்குச் சென்றிருந்தார்.
சந்தேகத்திற்குரிய பொலிஸ் கான்ஸ்டபிள், அவ்வழியிலேயே தானும் செல்வதாக கூறி, வீட்டில் விட்டு செல்வதாக, அச்சிறுமியை மோட்டார் சைக்கிளில் அழைத்துச் சென்று ஓர் அறையில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
புத்தல பேருந்து நிலையத்தில் கடமையில் மகளிர் பொலிஸ் பிரிவு அதிகாரிகள் குழுவால் சந்தேக நபர், கைது செய்யப்பட்டார்.
சந்தேக நபர், வெல்லவாய நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதுடன் இது தொடர்பான வழக்கு அடுத்த மாதம் 29 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு வர உள்ளது.