மோட்டார் சைக்கிள் விபத்தில் பொலிஸ் அதிகாரி ஒருவருக்கு நேர்ந்த சோகம்!
புத்தளத்தில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் நேற்றையதினம் (10-02-2024) பல்லம, நந்திமித்ர பாடசாலைக்கு அருகில் இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தில், ரிதிபென்திஎல்ல , 2 ஆம் கட்டை பகுதியை சேர்ந்த 22 வயதுடைய சிலாபம் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரே உயிரிழந்துள்ளார்.
சம்பவ தினத்தன்று சிலாபம் பகுதியிலிருந்து ஆனமடுவ பகுதியை நோக்கிப் பயணம் செய்த மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி மரமொன்றில் மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளது.
இந்த விபத்தில் படுகாயமடைந்த குறித்த பொலிஸ் கான்ஸ்டபிளை உடனடியாக சிலாபம் வைத்தியசாலையில் அனுமதித்த போதிலும் அவர் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்து சம்பவம் தொடர்பில் பல்லம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.