புத்தாண்டு விருந்தில் கைநீட்டிய பொலிஸ் உத்தியோகத்தர் கைது
புத்தாண்டை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விருந்து நிகழ்வொன்றில் இடம்பெற்ற தகராறில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஹபராதுவை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விருந்தில் ஒருவர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டவர் ஹபராதுவை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தராவார்.
முன்விரோதம் காரணமாக தாக்குதல்
கைதானவர் புத்தாண்டு முன்னிட்டு நண்பர்கள் சிலருடன் இணைந்து ஹபராதுவை - ஹருமல்கொட பிரதேசத்தில் விருந்தோம்பல் நிகழ்வொன்றை ஏற்பாடு செய்திருந்துள்ளார்.
இதன்போது, நிகழ்வில் இடம்பெற்ற தகராறு காரணமாகக் பொலிஸ் உத்தியோகத்தர் அங்கிருந்த நபரொருவரை பலமாகத் தாக்கியுள்ளார். இந்நிலையில் முன்விரோதம் காரணமாக இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தாக்குதலில் காயமடைந்தவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஹபராதுவை பொலிஸார் தெரிவித்தனர்.