பெண்ணிடம் மோசமாக நடந்துகொண்ட பொலிஸ் அதிகாரி: நீதிமன்றம் விதித்த கடுமையான தண்டனை!
நுவரெலியாவில் திருமணமாகாத பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த பொலிஸ் அதிகாரி ஒருவருக்கு 7 வருட கடூழிய சிறைத் தண்டனை விதித்து நீதிமன்று தீர்ப்பளித்துள்ளது.
இதேவேளை, பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 500,000 ரூபா நட்டஈடு மற்றும் குற்றவாளிக்கு 20,000 ரூபா அபராதம் செலுத்துமாறும் நுவரெலியா மேல் நீதிமன்ற நீதிபதி விராஜ் வீரசூரிய இன்று (14-02-2024) குற்றவாளிக்கு உத்தரவிட்டுள்ளார்.
நுவரெலியாவில் உள்ள பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய லக்ஷ்மன் சாலிய பண்டார விரசிங்க என்பவருக்கே குறித்த அபராதம் மற்றும் கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சிறைத் தண்டனையுடன், அபராதத் தொகையை செலுத்தத் தவறினால் மேலும் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையை நீட்டிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
கடந்த 2019 ஆம் ஆண்டு குறித்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஹைஃபாரஸ்ட் பொலிஸ் நிலையத்தில் பணிபுரிந்தபோது பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் பதிவுசெய்யப்பட்டு அவருக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டது.
அந்தக் குற்றச்சாட்டின் அடிப்படையில் பொலிஸ் அதிகாரியின் சேவையை தற்காலிகமாக பொலிஸ் திணைக்களம் இடைநிறுத்தியது.
ஆரம்ப விசாரணையின் பின்னர், குறித்த பொலிஸ் கான்ஸ்டபிளினால் சமர்ப்பிக்கப்பட்ட முறையீட்டை பரிசீலித்து, அதே பொலிஸ் நிலையத்தின் சேவைக்கு அமர்த்தப்பட்டுள்ளார்.