ஜனாதிபதி அநுரவின் கச்சத்தீவு பயணத்தால் இந்தியாவில் சலசலப்பு!
கடந்த செப்ரெம்பர் முதலாம் திகதி இலங்கை ஜனாதிபதி அனுரகுமர யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்ததுடன் அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டிருந்தார்.
அதுமட்டுமல்லாது இந்தியா தனது என சொந்தம் கொண்டாட நினைக்கும் , யாழ்ப்பாணம் கச்சதீவுக்கு திடீர் விஜயம் மேற்கொண்டமை இந்திய அரசியலில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
கச்சதீவை யாருக்காகவும் விட்டுகொடுக்க முடியாது
ஜனாதிபதியின் இந்த திடீர் விஜயம் கச்சதீவை மீட்கவேண்டும் என இந்திய அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தி வரும் தமிழக அரசிற்கும் , மற்றும் த,வெ.க தலைவர் விஜய்க்கும் பதிலளிக்கும் முகமாக , கச்சத்தீவை யாருக்காகவும், எப்பொதும் விட்டுகொடுக்க முடியாது என ஆணித்தரமாக ஜனாதிபதி தெரிவித்திருந்தமை தற்போது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதேவேளை இலங்கையில் அரசியல் நிலவரங்களை உன்னிப்பாக கவனிக்கும் இதியாவின் றோ உளவுப்பிரிவுக்கும் தெரியாத ரகசியமாகவே ஜனாதிபதி அனுரவின் கச்சத்தீவு பயணம் அமைந்திருந்ததாகவும் கூறப்படுகின்றது.
எது எப்படி இருப்பினும் கச்சத்தீவு தொடர்பில் ஜனாதிபதி அனுர கூறிய உறுதிமொழி வடக்கு மீனவர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.