திடீர் சோதனையில் ஈடுபட்ட பொலிஸார்...பறிமுதல் செய்யப்பட்ட அழகு சாதன பொருட்கள்
திருகோணமலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட என்.சி.வீதி, மத்திய வீதி மற்றும் 3 ஆம் குறுக்குத்தெரு வீதிகளில் நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரிகளும் பொலிஸாரும் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
அந்த சமயத்தில் சருமத்திற்கு ஒவ்வாத அழகு சாதனப் பொருட்கள், கிரீம் வகைகள், சாயப் பொருட்கள். மேலும் போலியாக தயாரிக்கப்பட்ட தடை செய்யப்பட்ட பொருட்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டதாக நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.
பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களானது 20 இலட்சத்துக்கும் அதிகப்படியான பெறுமதியை கொண்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் குறிப்பிட்ட தடை விதிக்கப்பட்ட பொருட்களை ஒன்லைனில் விற்க முற்பட்ட ஒருவரையும் நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரிகள் கைது செய்தனர்.