யாழ் இசைநிகழ்ச்சி களேபரத்தில் கவனம் ஈர்த்த பொலிஸ்காரர்!
யாழ் - முற்றவெளி மைதானத்தில் நேற்றைய தினம் (09.02.2024) இடம்பெற்ற தென்னிந்திய பிரபல பாடகரான ஹரிகரனின் இசை நிகழ்ச்சியில் குழப்பநிலை ஏற்பட்டமையால் குறித்த இசை நிகழ்ச்சி இடைநிறுத்தப்பட்டது.
இசைநிகழ்ச்சியை பார்வையிட வருகைத்தந்த மக்கள் தடுப்புகளை உடைத்துக்கொண்டு கட்டுப்பாடுகளை மீறி நடந்துக்கொண்டமையால் குழப்பநிலை ஏற்பட்டுள்ளதாக ஏற்பாட்டுக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
இதன்போது ஏற்பட்ட சன நெரிசல் காரணமாக பலர் காயமடைந்து சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.
தொடர்ந்து பொலிஸார் சில நிமிடங்களில் குழப்பநிலையை கட்டுப்படுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தொடர்ந்து யாழ் பொலிஸ் அதிகாரிகள் மனிதாபிமானத்துடன் மக்களை பாதுகாக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
ஏராளமான மக்கள் கலந்துக்கொண்டிருந்த குறித்த இசைநிகழ்ச்சியில் ஏற்பட்ட குழப்பநிலையின் போது குழந்தையை காப்பாற்றிய பொலிஸாரின் செயற்பாடு நெகிழ்ச்சியடைய செய்கின்றது.