விடுதி ஒன்றில் பொலிஸாருக்கு காத்திருந்த அதிர்ச்சி; பெண்கள் உட்பட ஐவர் கைது
பொலிஸாரின் சுற்றிவளைப்பில் பத்தரமுல்ல பிரதேச விடுதி ஒன்றில் 650 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் 5 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் 2 பெண்களும் அடங்குவதாகவும், அவர்கள் நீர்கொழும்பு மற்றும் கட்டான பிரதேசத்தை சேர்ந்தவர்கள் எனவும் தெரியவந்துள்ளது.
ஐஸ் போதைப்பொருளின் பெறுமதி
ஏனைய 3 சந்தேகநபர்களும் கொழும்பு மற்றும் எம்பிலிப்பிட்டிய பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.
இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலுக்கு அமைய, பத்தரமுல்லை பகுதியிலுள்ள விடுதி ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது குறித்த போதைப்பொருளுடன் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

34 ஆயிரம் ரூபாய்க்கு சாப்பிட்டு பணம் செலுத்தாமல் எஸ்கேப்பான குடும்பம்; வித்தியாசமாக பழிதீர்த்த உணவகம்
சந்தேகநபர்கள் மற்றும் போதைப்பொருட்கள் மேலதிக விசாரணைகளுக்காக தலங்கம பொலிஸாரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் கைப்பற்றப்பட்ட ஐஸ் போதைப்பொருளின் பெறுமதி சுமார் 1 கோடியே 14 இலட்சம் ரூபா என தெரிவிக்கப்படுகின்றது.