இவரை தெரியுமா? பொதுமக்களிடம் உதவிகோரும் பொலிஸார்
மட்டக்களப்பு புதூரைச் சேர்ந்த 56 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவர் கடந்த 26ம் திகதியில் இருந்து காணாமல் போயுள்ளதாக மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.
நகரிலுள்ள உணவகத்தில் வேலை செய்து வந்த புதூரைச் சேர்ந்த 56 வயதுடைய கணேஷ் விக்கினேஸ்வரன் கடந்த மாதம் 19ம் திகதி வழமைபோல வீட்டில் இருந்து உணவகத்திற்கு வேலைக்கு சென்றவர் அன்று வீடு திரும்பவில்லை என கூறப்படுகின்றது.
பொதுமக்களிடம் கோரிக்கை
இந் நிலையில் அவரை உறவினர்கள் தொடர்பு கொண்ட போது மாமாங்க கோவில் உற்றவத்தையிட்டு அங்கு தான் வேலை செய்யும் முதலாளி உணவு கடை அமைத்துள்ளதாகவும் அங்கு நிற்பதாக தெரிவித்துள்ளார்.
அதன் பின்னர் கடந்த மாதம் 26 ஆம் திகதி முதலாளி சம்பளம் தரவில்லை தந்ததும் வருவதாக தொலைபேசி ஊடாக தெரிவித்து கொண்டார். அதன் பின்னர் கோவில் உற்சவம் முடிவுற்ற பின்னர் அவரின் தொலைபேசி செயலிழந்துள்ளது
அடுத்து அவர் வீடு திரும்பியதையடுத்து அவரை உறவினர்கள் தேடியும் அவரை காணவில்லை என முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் அவர் தொடர்பாக தகவல்கள் கிடைத்தால் உடனடியாக மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலையத்திற்கு அல்லது அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கு அறிவிக்குமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.