போராட்டத்தை கலைக்க வான்நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்திய காவல்துறையினர்!
அலரி மாளிகைக்கு அருகில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களை கலைப்பதற்காக பொலிஸ் அதிகாரிகள் வான்நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியதாக காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இன்று பிற்பகல் (09-05-2022) முதல் அலரி மாளிகைக்கு முன்பாக பலர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தரப்பினர் பலவந்தமாக நுழைவாயிலை உடைத்துக் கொண்டு அலரி மாளிகைக்குள் நுழைய முயன்றதையடுத்து அப்பகுதியில் பதற்றம் நிலவியது.
இதனையடுத்து, பொலிஸ் அதிகாரிகள் கண்ணீர்ப்புகை பிரயோகம் நடத்தியிருந்தனர். அதன்போது, குறித்த பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த நீர்த்தாரை பிரயோக வாகனத்தின் மீதும் போராட்டக்காரர்களை தாக்குதல் நடத்தினர்.
இந்த நிலையில், அப்பகுதியில் தொடர்ந்தும் ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டுவந்த நிலையில், ஆர்ப்பாட்டக்காரர்களை கலைப்பதற்காக வெற்று வானை நோக்கி பல தடவைகள் காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.