ரம்புக்கனையில் கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறை; ஒருவர் பலி; வெளியான அதிர்ச்சித் தகவல்! (Photos)
ரம்புக்கனையில் இடம்பெற்ற போராட்டத்தின் போது பொலிஸாரால் நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் சம்பவத்தில் பொலிஸார் பொதுமக்கள் மீது ஏகே 47 பிரயோகித்திருந்தமை அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது .
சம்பவத்தில் காயமடைந்த 11 போராட்டக்காரர்கள் துப்பாக்கிச் சூட்டுக்கு காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அதில் 4 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் கேகாலை வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்நிலையில் போராட்டகாரகள் மீது ஏகே 47 பிரயோகித்திருந்தமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள அதேவேளை அது குறித்த புகைப்படங்களும் வெளியாகியுள்ளது.
நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடியை அடுத்து எரிபொருள் நெருக்கடிக்கு தீர்வைக் கோரி இன்று அதிகாலை 1.30 மணி முதல், கண்டி – கொழும்பு ரயில் மார்க்கத்தை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
அத்துடன் ரம்புக்கனை – கேகாலை, குருநாகல் மற்றும் மாவனெல்ல வீதிகளை மூடி போராட்டத்தில் ஈடுபட்ட நிலையிலேயே இவ்வாறு துப்பாக்கி பியோகம் மேற்கொள்ளப்பட்டுள்ள சம்பவத்தல் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்தி
போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கி பிரயோகம்? ரம்புக்கனையில் பதற்றமான சூழல்(Photos)




