வவுனியாவில் தமது ஜனநாயக கடமையை செய்யும் பொலிஸார்!
2024 இலங்கை ஜனாதிபதி தேர்தலுக்கு இன்று தபால் மூல வாக்களிப்பு ஆரம்பமான நிலையில் வவுனியா பொலிஸார் தங்களது தபால் மூல வாக்குகளை வவுனியா பொலிஸ் தலைமையக பொலிஸ் நிலையத்தில் வாக்களிக்கின்றனர்.
வரும் 21 ஆம் திகதி இலங்கை ஜனாதிபதி தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில், இன்று 04ம் திகதி முதல் 06ம் திகதி வரை தபால் மூல வாக்களிப்பு இடம்பெறவுள்ளது.
பொலிஸார் வாக்களிக்க விசேட தினம்
அதன்படி மாவட்டச் செயலகம், தேர்தல்கள் ஆணைக்குழு, பொலிஸார் தமது தபால் மூல வாக்குகளை வாக்களிக்க விசேட தினமாக ஒதுக்கப்பட்டுள்ளது.
இந் நிலையில் வவுனியா பொலிஸார் தங்களது தபால் மூல வாக்குகளை வவுனியா பொலிஸ் தலைமையக பொலிஸ் நிலையத்தில் வாக்களிக்கின்றனர்.
அத்துடன், வவுனியா மாவட்டத்தில்128,585, மன்னார் மாவட்டத்தில் 90,707, முல்லைத்தீவு மாவட்டத்தில் 86,889 வாக்காளர் உள்ளடங்கலாக வன்னி தேர்தல் தொகுதியில் வாக்களிக்க 306,081 பேர் தகுதி பெற்றுள்ளதுடன், 387 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.