வெளிநாட்டுக்கு தப்பியோடிய பொலிஸ் கான்ஸ்டபிளின் காதலி கைது!
துப்பாக்கியுடன் காணாமல் போய் துபாய் தப்பிச் சென்ற பொலிஸ் கான்ஸ்டபிளின் காதலியாக இருந்த நடன ஆசிரியை ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைதான ஆசிரியை இரவு விடுதிகளில் நடனமாட வந்தபோது பொலிஸ் கான்ஸ்டபிளை சந்தித்து காதல் கொண்டதாக தெரியவந்துள்ளது.
வெளிநாட்டுக்கு தப்பியோடிய பொலிஸ்
தப்பிச் சென்ற கான்ஸ்டபிள் தொடர்பாக விசாரணை நடத்தியதில், நடன ஆசிரியை உடல்நிலை சரியில்லை என்று கூறி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
எனினுக் அவருக்கு எந்த நோயும் இல்லை என்று தெரிந்ததும், அவர் மருத்துவமனையில் இருந்து வெளியேறிய பின்னர் கைது செய்யப்பட்டார்.
இந்த கான்ஸ்டபிள் துப்பாக்கியுடன் பணிக்குச் செல்லாமல், காதலியான நடன ஆசிரியை தங்கியிருந்த வீட்டிற்குச் சென்று அங்கிருந்து வாடகை காரில் கட்டுநாயக்க விமான நிலையத்திற்குச் சென்றதாக தெரியவந்துள்ளது.