ஊழல், முறைகேடுகளை ஆதாரத்துடன் வெளிப்படுத்தியமைக்கு எதிராக பொலீஸில் முறைப்பாடு!
கிளிநொச்சி மகா வித்தியாலயத்தின் தலைமையால் மேற்கொள்ளப்பட்ட ஊழல், முறைகேடுகள், மோசடிகள் தொடர்பில் RTI மூலம் பெற்றுக்கொள்ளப்பட்ட ஆவணங்களை கடந்த சில நாட்களாக பகிரங்கப்படுத்தியிருந்த Murukaiya Thamilselvan என்ற நபர் முகநூலில் தெரிவித்திருந்தார்.
மேலும் அவர் முகநூல் பதிவில் தெரிவித்தது,
இந்த மாவட்டத்தில் இடம்பெறுகின்ற ஊழல், முறைகேடுகள், மோசடிகளை கட்டுப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை பயன்படுத்தி அதனை மேற்கொண்டு வருகின்றேன்.
இந்த நிலையில் இன்று(15-06-2022) கிளிநொச்சி மகா வித்தியாலயத்தின் பாடசாலை அபிவிருத்தி குழுவினை கூட்டி ( அபிவிருத்தி குழுவில் நானும் ஒரு உறுப்பினர் எனக்கு கூட்டத்திற்கான அறிவித்தல் இல்லை) ஆதாரத்துடன் நான் வெளியிட்ட பதிவுகளுக்கு எதிராக பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ய வேண்டும் என்று தீர்மானம் எடுத்துள்ளனர்.
எனது கேள்வி என்வென்றால்
- கடந்த காலங்களில் இடம்பெற்ற மோசடிகள் தொடர்பில் ஆதாரங்களுடன் நான் வெளியிட்ட பதிவுகளுக்கு எதிராக எந்த வகையில் முறைப்பாடு செய்யப் போகின்றீர்கள்?
- ஊழல், முறைகேடுகள், மோசடிகளை ஆதாரத்துடன் வெளிப்படுத்திய எனக்கு எதிராக பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ய தீர்மானம் எடுத்த பாடசாலை அபிவிருத்தி குழு மோசடியில் ஈடுப்பட்ட அதிபருக்கு எதிராக குறைந்த பட்சம் கருத்துக் கூட கூறாது இருப்பது ஏன்? அப்படியாயின் நீங்களும் அதிபரின் மோசடிகளுக்கு உடந்தையா?
- மோசடிகள் செய்தவரை பாதுகாக்க நீங்கள் எடுத்த தீர்மானம் உங்கள் மனசாட்சியை உறுத்தவில்லையா? உங்களுக்கு வெட்கமாக இல்லை களவை காப்பாற்ற நாளை பொலீஸ் நிலையம் செல்கின்றோம் என்பதனை எண்ணி.
- களவு எடுத்தவரை விட்டுவிட்டு கண்டு பிடித்து ஆதாரங்களுடன் வெளியிட்டவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நீங்கள் தீர்மானித்தது எந்த விதத்தில் நியாயம்?
- இவ்வாறு மோசடிகாரர்களுக்கு பின்னால் உங்களை போன்றவர்கள் இருப்பதன் மூலம் இந்த சமூகத்திற்கும், அங்கு கல்வி கற்கும் 2000 க்கு மேற்பட்ட பிள்ளைகளுக்கும் நீங்கள் எதனை கற்றுகொடுக்க முற்படுகின்றீர்கள்?
- உங்கள் பிள்ளைகளுக்காக வழங்கப்பட்ட பால் பைகற்றுகள், உணவுப் பொருட்கள், போன்றவற்றை களவெடுத்துச் செல்வதனை நீங்கள் ஏற்றுக்கொள்கின்றீர்கள்?
- கிளிநொச்சி மகா வித்தியாலயத்தின் இவ்வாறான நிலைமைகளுக்கு பலவீனமான பாடசாலை அபிவிருத்திச் சங்கமும் பதிலளிக்க வேண்டும்.
- கண்முன்னே நடக்கும் தவறுகளை தட்டிக் கேட்கும் திராணி உங்களிடம் இல்லை என்றால் தயவு செய்து அமைதியாக இருந்துவிட்டு போகங்கள்.ஆனால் உடந்தையாக இருக்காதீர்கள்
- பாடசாலை அபிவிருத்திக் குழு என்பது அதிபரின் விருப்பு வெறுப்புக்களுக்கு தலையாட்டுவதில்லை. பாடசாலையின் அபிவிருத்திக்காக செயற்படுவதே.
- உங்களின் இந்த நடவடிக்கை என்னை எந்த வித்திலும் கட்டுப்படுத்தாது ஏன்னெனில் நான் உண்மைகளை ஆதாரங்களுடன் எழுதுகிறேன். அவதூறு செய்யவில்லை.