சமூக ஊடகங்களில் பரவி வரும் காணொளி தொடர்பான பொலிஸாரின் விளக்கம்!
சமூக ஊடகங்களில் பரவி வரும் காணொளி; பொலிஸாரின் விளக்கம்! மொல்லிகொட பகுதியில் ஒரு மாடி வீட்டின் அருகில் இரு தரப்பினருக்கிடையில் ஏற்பட்ட மோதல் நிலைமை காணப்படும் காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் பரவி வரும் நிலையில் பொலிஸார் அது தொடர்பில் விளக்கமளித்துள்ளனர்.
இச் சம்பவம் 2026.06.13 அன்று வத்துவை, மொல்லிகொட பகுதியில் உள்ள ஒரு மாடி வீட்டில் வாடகை அடிப்படையில் வசித்து வந்த இரு தரப்பினருக்கிடையில் ஏற்பட்ட மோதல் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

சிலர் பரப்பும் தகவல் முற்றிலும் பொய்யானது
மோதலின் போது இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் வாத்துவை பொலிஸாரால் அன்றைய தினமே கைது செய்யப்பட்டு, 2026.06.14 அன்று பானதுறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
அதன் பின்னர், குறித்த வழக்கு சமரச சபைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. மேலும், தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய இன்னும் மூன்று சந்தேகநபர்களைக் கைது செய்வதற்காக வாத்துவை பொலிஸ் நிலையம் விசாரணைகளை முன்னெடுத்து வருகிறது.
அதேவேளை இந்த மோதலின் விளைவாக ஒருவர் உயிரிழந்துள்ளதாக சிலர் பரப்பும் தகவல் முற்றிலும் பொய்யானது என்பதை அறிவித்துக் கொள்கிறோம்.
“கருத்து வேறுபாடு, தகராறு அல்லது ஏதேனும் பாதிப்பை எதிர்கொண்ட சந்தர்ப்பங்களில், பொதுமக்கள் பொலிஸாரின் உதவியை நாட வேண்டும். உங்கள் அருகிலுள்ள பொலிஸ் நிலையமும், 119 அவசர அழைப்பு சேவையும் 24 மணி நேரமும் செயல்பாட்டில் உள்ளன.
கோபம் அல்லது தூண்டுதலின் காரணமாக குற்றச் செயலில் ஈடுபடுவது, அல்லது குற்றம் செய்ய மற்றொருவருக்கு உதவி, ஊக்கம் வழங்குவது போன்ற செயல்கள் சட்டப்படி குற்றமாகும்.
ஆரம்பச் சம்பவத்தில் நீங்கள் பாதிக்கப்பட்டவராக இருந்தாலும், பின்னர் நீங்கள் செய்த குற்றத்திற்கான தண்டனையை நீதிமன்றத்தில் எதிர்கொள்ள நேரிடும் எனவும் பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்