வெடுக்குநாறிமலையில் ஐஸ்கிறீம் வியாபாரியை துரத்தியடித்த பொலிஸார்!
வவுனியா வெடுக்குநாறிமலையில் ஐஸ்கிறீம் வியாபாரத்தில் ஈடுபட்ட வியாபாரியினை பொலிஸார் துரத்தியதால் ஆலய வளாகத்தில் குழப்பநிலை ஏற்பட்டது.
சிவபெருமானுக்குரிய சிவராத்திரி விரதம் இன்று உலகம் முழுவதும் வாழும் இந்துக்களால், அனுஸ்டிக்கபப்ட்டு வரும் நிலையில், வெடுக்குநாறிமலையிலும் இன்று வெள்ளிக்கிழமை சிவராத்திரி வழிபாடுகளை மேற்கொள்ளச் சென்ற பொதுமக்களுக்கு பொலிஸாரால் பல்வேறு அசௌகரியங்கள் ஏற்படுத்தப்பட்டது.
பொலிஸாரால் குழப்பநிலை
அதேவேளை , பொதுமக்களுக்கு குடிதண்ணீரை கொண்டு சென்ற நீர்தாங்கி பொலிஸாரால் இடைவழியில் நிறுத்தப்பட்டது. இதனால் 5 கிலோ மீற்றர்கள் நடந்துசென்ற பொதுமக்கள் நீர் இன்றி அசௌகரியத்தை எதிர்கொண்டனர்.
இதேவேளை ஆலய வளாகத்தில் ஐஸ் கிறீம் வியாபாரத்தில் ஈடுபட்ட வியாபாரி ஒருவரை பொலிஸார் விற்பனையில் ஈடுபட வேண்டாம் என தெரிவித்து ஆலய வளாகத்தை விட்டு அகற்றினர்.
இதனால் பொதுமக்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் குழப்பநிலை ஏற்பட்டதாகவும் தெரியவருகின்றது.
இதேவேளை குருந்தூர்மலை மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் உள்ள விகாரைகளில் இருந்து பௌத்த மதகுருக்களும் சிங்கள மக்களும் வருகை தந்திருந்தனர்.
மேலும் வவுனியாவின் அனைத்து பகுதிகளில் இருந்து பொலிஸார் விசேட அதிரடிப்படையினர் வரவழைக்கப்பட்டு குறித்த பகுதியில் கடுமையான பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது.