யாழில் வீட்டிற்குள் நுழைந்து கதவை உடைத்த பொலிஸார்; நடத்து என்ன?
யாழ்ப்பாணம் - -நெல்லியடி பிரதேசத்தில் பொலிஸ் அதிகாரி ஒருவர் வீட்டிற்குள் நுழைந்து ஒரு அறையின் கதவை உதைத்துத் திறக்கும் வீடியோ ஒன்று கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
இந்த சம்பவம் குறித்து பொலிஸார் விளக்கம் அளித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். இந்த சம்பவம் யாழில் நெல்லியடி பொலிஸ் பிரிவில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
உரிமம் பெறாத இறைச்சி கடை
நெல்லியடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வேம்படி பகுதியில் உரிமம் பெறாத இறைச்சி கடையை நடத்தி வந்துள்ளார்.
இதன்போது ஒரு சிறிய கன்று கொல்லப்பட்டது தொடர்பாக கிடைத்த தகவலின் அடிப்படையில், 24.03.2025 அன்று நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் சோதனை நடத்தப்பட்டதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பொலிஸ் அதிகாரிகள் சோதனை நடத்த சம்பந்தப்பட்ட இடத்திற்குச் சென்றபோது, சந்தேக நபர் வீட்டின் ஒரு அறைக்குள் ஓடி, கதவை மூடிவிட்டு, அதைப் பூட்டியதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனையடுத்து சந்தேக நபர் அறையில் இருந்ததால் அவரை கைது செய்வதற்காக அறையின் பூட்டிய கதவைத் திறக்க பொலிஸ் அதிகாரி பல முறை கதவை உதைத்ததை அடுத்து, சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.