மக்களிடம் உதவி கோரும் பொலிஸார்!
கல்கிசை நீதிமன்ற வளாகத்திற்குள் கடந்த ஆகஸ்ட் 4ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பிலேயே இரு சந்தேக நபர்கள் பொலிஸாரால் தேடப்பட்டு வருகின்றனர்.
சிசிடிவி காட்சிகள்
சிசிடிவி காட்சிகள் மற்றும் நேரில் கண்ட சாட்சிகளிடமிருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் துப்பாக்கிச் சூடு நடத்திய மற்றும் துப்பாக்கிச் சூட்டுக்கு ஒத்தாசை புரிந்த குற்றச்சாட்டில் தேடப்பட்ட மற்றொருவரின் மாதிரி படம் வரையப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
துப்பாக்கிச் சூட்டுக்குப் பின்னர் சந்தேகநபர்கள் மகிழுந்தில் தப்பிச் சென்றுள்ளதாகவும், அதன் விபரங்களையும் பொலிஸார் தேடுவதாகவும் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
சந்தேகநபர்கள் மற்றும் வாகனம்
சந்தேகநபர்கள் மற்றும் வாகனம் தொடர்பில் ஏதேனும் தகவல் தெரிந்தால் கல்கிசை குற்றத்தடுப்பு பிரிவுக்கு 011-271516 அல்லது கல்கிசை பொலிஸ் நிலையத்தின் 071-8591664 என்ற தொலைபேசி இலக்கத்துக்கு அறிவிக்குமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.