யாழில் முக்கிய திருடன் பொலிஸாரிடம் சிக்கினர்!
யாழ். பொலிஸ் பிராந்திய விசேட புலனாய்வு பொலிஸாரின் புலன் விசாரணையில் திருட்டில் ஈடுபட்டு வந்த நபர் இன்றைய தினம் (19-10-2022) கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்றயதினம் (18-10-2022) யாழ்.கொடிக்காமம் சியாமளா மில் வீதியில் தனிமையில் இருந்த மூதாட்டியின் ஒண்டரைப் பவுண் தங்கச் சங்கிலியினை திருடிச் சென்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
உப பொலிஸ் பரிசோதகர் ராஜரத்தினம் பிரதீப் தலைமையிலான பொலிஸ் குழுவினர் சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.
கைதான நபர் யாழ்ப்பாணம் குரு நகர் பகுதியை சேர்ந்த 26 வயதுடைய நபர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைதான நபர் கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், அவரை சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.