பல இடங்களில் கைவரிசை; யாழில் பதுங்கியவர்களை மடக்கிய பொலிஸார்!
இருவேறு கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்படைய 4 சந்தேகநபர்கள் மானிப்பாய் பகுதியில் பதுக்கியிருந்த நிலையில் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன், கைதான நபர்கள் போதைக்கு அடிமையானவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்திருக்கின்றனர். நேற்றைய தினம் இந்த கைது சம்பவம் இடம்பெற்றிருக்கின்றது.
கனகராயன்குளம் பகுதியில் கொள்ளை
கனகராயன்குளம் பகுதியில் உள்ள வீடொன்றுக்குள் நேற்றுமுன்தினம் நுழைந்த கொள்ளை கும்பல் வீட்டில் இருந்த இருவரை தாக்கிவிட்டு சுமார் 3 பவுண் நகை மற்றும் 40 ஆயிரம் பணத்தை கொள்ளையடித்துச் சென்றது.
அதேவேளை இதேகுழு நவாலி- வழுக்கையாறு பகுதியில் உள்ள வீடொன்றுக்குள் நுழைந்து கணவன், மனைவியை தாக்கி 3 பவுண் தங்க நகையை கொள்ளையடித்துச் சென்றிருக்கின்றது.
கொள்ளைக் குழுவினர் நவாலியில் பதுங்கியுள்ளதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து பொலிஸார் சம்பவ இடத்தை முற்றுகையிட்ட 4 சந்தேகநபர்களையும் கைது செய்துள்ளனர்.