யாழில் பொலிஸார் அராஜகம் ; கஜேந்திரன் எம்.பி நாடாளுமன்றில் ஆவேசம்

Sri Lanka Police Jaffna Crime Selvarajah Kajendren
By Sahana Jun 06, 2024 04:28 PM GMT
Report

யாழ்ப்பாணத்திலே அல்லது வடகிழக்கில் பொலிசாரது அராஜகங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருவதாக கஜேந்திரன் எம்பி சுட்டிக்காட்டியுள்ளார்.

இன்று (2024.06.06) இடம்பெற்றுள்ள நாடாளுமன்ற உரையின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில்,

கடற்கரையில் தென்பட்ட ராட்சத ஆக்டோபஸ்... வைரலான புகைப்படம்! வெளியான உண்மை

கடற்கரையில் தென்பட்ட ராட்சத ஆக்டோபஸ்... வைரலான புகைப்படம்! வெளியான உண்மை

யாழ்ப்பாணத்திலே அல்லது வடகிழக்கில் பொலிசாரது அராஜகங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்ற நேரத்திலே கடந்த 2023 ஆம் ஆண்டு 11 ஆம் மாதம் 19 ஆம் திகதி ஒரு இளைஞர் வட்டுக்கோட்டை பொலிஸாரது கட்டுப்பாட்டுக்குள் இருந்த பொழுது படுகொலை செய்யப்பட்டு உயிரிழந்திருந்தார்.

அவருடைய கொலை தொடர்பாக 4 பொலிஸார் கைது செய்யப்பட்டிருக்கின்ற போதிலும் கூட அந்த சித்திர வதைகள் நடைபெற்ற நான்கு நாளும் அந்த வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் பொறுப்பதிகாரியாக இருந்த OIC மீது இது வரைக்கும் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை.

யாழில் பொலிஸார் அராஜகம் ; கஜேந்திரன் எம்.பி நாடாளுமன்றில் ஆவேசம் | Police Anarchy Jaffna Gajendran Mp In Parliament

இது தொடர்பாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் கவனம் செலுத்தாமல் இருப்பது ஏன் என்கின்ற ஒரு கேள்வி இருக்கின்றது. ஆகவே இது தொடர்பாக உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.

நேற்று முன்தினம் பொன்னாலை பகுதியிலே கிருஷ்ணவேணி என்கின்ற ஒரு பெண் தலைமைத்துவ குடும்பத்தை சேர்ந்த ஒரு பெண் தன்னுடைய வளவிலே ஒரு குழாய் கிணறு ஒன்றை அமைத்து கொண்டிருக்கின்ற பொழுது அங்கு சென்ற வட்டுக்கோட்டை பொலிஸ் நிலைய பொலிசார் அந்த அனுமதி பெறப்படவில்லை என்பதை காரணம் காட்டி அவரிடம் இருந்து 8000 ரூபாய் கப்பத்தை பெற்றுக்கொண்டு சென்றிருக்கிறார்கள்.

அந்த தாயின் மகன் க.பொ.த உயர்தரம் படித்துக்கொண்டிருக்கிறார். பாடசாலை கல்வி போக மிகுதி நேரம் போக கூலி வேலை செய்து அதிலே சேமித்த பணத்திலே தான் இந்த குழாய் கிணறு அமைக்கின்ற பணி மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.

யாழில் பொலிஸார் அராஜகம் ; கஜேந்திரன் எம்.பி நாடாளுமன்றில் ஆவேசம் | Police Anarchy Jaffna Gajendran Mp In Parliament

அந்த பணத்தில் தான் 8000 ரூபாயை புடுங்கி சென்றிருக்கிறார்கள். அந்த பொலிசாரினுடைய பெயர்கள் சுமணஸ்ரீ, குமார, மற்றும் க்ஷுன் என்ற மூன்று போலீஸ் உத்தியோகத்தர்கள். இவர்கள் இந்த கப்பத்தை பெற்றிருக்கிறார்கள்.

இவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அடுத்ததாக ஆறுகால் மடத்தை சேர்ந்த கந்தசாமி சேகரன் என்ற மன நிலை பாதிக்கப்பட்ட ஒரு நபர் 2023 ஆம் ஆண்டு 11 ஆம் மாதம் 14 ஆம் திகதி காரைநகர் பகுதியிலே கிராம சேவையாளர் அலுவலகம் ஒன்றில் சந்தேகத்துக்கு இடமான முறையிலே நிற்கிறார் என்ற தகவல் கிராம சேவையாளரால் வட்டுக்கோட்டை பொலிசாரால் கடந்த வருடம் 11 ஆம் மாதம் 18 ஆம் திகதி பொன்னாலை சந்தியிலே பற்றைக்குள்ளிருந்து சிதைந்த நிலையில் அவரது சடலம் மீட்கப்பட்டது.

இலங்கையில் மீன்களின் விலைகளில் சடுதியாக ஏற்பட்டுள்ள பாரிய மாற்றம்!

இலங்கையில் மீன்களின் விலைகளில் சடுதியாக ஏற்பட்டுள்ள பாரிய மாற்றம்!

அந்த செய்தியை சேகரிப்பதற்கு சென்ற ஊடகவியலாளர் ஒருவர் பொலிஸாரால் அச்சுறுத்தப்பட்டிருக்கின்றார். அந்த கொலை தொடர்பாக வட்டுக்கோட்டை பொலிஸாரால் இன்று வரை எவரும் கைது செய்யப்படவில்லை.

அதே போன்று காங்கேசன் துறை விசேட பொலிஸ் பிரிவை சேர்ந்த (பொலிஸ் இலக்கம் 90829) வாளால் பொது மகன் ஒருவரை வெட்டியிருக்கிறார்.

இந்த சம்பவம் தொடர்பாக இன்றுவரை அவர்மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. துரதிஷ்டவசமாக கடந்த 30ஆம் திகதி யாழ்ப்பாணம் ஒருங்கிணைப்பு குழு கூட்டத்திலே யாழ்ப்பாணத்துக்கு பொறுப்பான உதவி பொலிஸ் அத்தியட்சகர் கூறுகிறார் அவர் தற்காப்பு நடவடிக்கையாக அவர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை தடுக்க முற்பட்ட போது தான் அந்த வாள்வெட்டு நடைபெற்றது என்று சொல்லி.

ஆனால் இது அப்பட்டமான பொய் அந்த ஆவணங்கள் நான் இங்கே சபையின் நடவடிக்கைக்காக சமர்பிக்கின்றேன். இது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டு கொள்கிறேன். என அவர் தெரிவித்துள்ளார்.

கடற்கரையில் தென்பட்ட ராட்சத ஆக்டோபஸ்... வைரலான புகைப்படம்! வெளியான உண்மை

கடற்கரையில் தென்பட்ட ராட்சத ஆக்டோபஸ்... வைரலான புகைப்படம்! வெளியான உண்மை

10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கனடா, Canada

19 Apr, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, மண்கும்பான், கனடா, Canada

21 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, Markham, Canada

16 Apr, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், வவுனியா, பிரான்ஸ், France

21 Apr, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, Versailles, France

24 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம்

21 Apr, 2025
மரண அறிவித்தல்

சங்கானை கிழக்கு, Meaux, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, அல்லைப்பிட்டி

21 Apr, 2013
2ஆம் ஆண்டு நினைவஞ்சலி. 15ஆம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
மரண அறிவித்தல்

அநுராதபுரம், விசுவமடு

19 Apr, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, வண்ணார்பண்ணை

16 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Toronto, Canada

03 May, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், நியூ யோர்க், United States

20 Apr, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பிரான்ஸ், France

18 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

13 Apr, 2026
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US