யாழில் மக்களுக்கு இடையூறு விளைவிக்கும் நபர்கள் மீது பொலிஸார் நடவடிக்கை
யாழ் நகரில் ஊதுபத்தி வியாபாரம், சாத்திரம் என்ற பெயரில் மக்களுக்கு இடையூறு விளைவிக்கும் நபர்கள் மீது பொலிஸார் நடவடிக்கைகளை மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ் விசேட சோதனை நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ் மாவட்ட பிரதிப்பொலிஸ்மா அதிபரின் உத்தரவுக்கமைய யாழ் மாவட்ட விசேட குற்றதடுப்பு பிரிவின் உப பொலிஸ் பரிசோதகர் பிரதீப் தலைமையிலான குழு இந்த கைது நடவடிக்கையை மேற்கொண்டது.
கைது செய்யப்பட்டவர்கள்
கைது செய்யப்பட்டவர்களிடம் உறுதிப்படுத்தக்கூடிய ஆவணம் அடையாள அட்டை இல்லை என்பதுடன் வேறு பகுதிகளில் இருந்து தவறான நோக்கங்களுக்காக வந்திருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு சந்தேகத்தில் நான்கு பேர் கைது செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு புத்தளம் பகுதியைச்சேர்ந்த ஆண்களே இவ்வாறு கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சாத்திரம் பார்த்தல் ஊதுபத்தி வியாபாரங்களில் நடைபாதைகளில் மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
அண்மைக்காலமாக யாழ் நகரில் இப்படியான வெளியிட வியாபாரிகளால் மக்கள் வெளிநாட்டிலிருந்து வருவோர் உள்ளிட்டோர் பெரும் சிரமங்களை மேற்கொண்டுவந்தமை குறிப்பிடதக்கது.