யாழில் முறைப்பாட்டை ஏற்க மறுத்து பொலிஸார் சண்டித்தனம்
யாழ்ப்பாணம் - இளவாலை பொலிஸார் பணம் களவு கொடுத்தவிரின் முறைப்பாட்டை ஏற்கவில்லை என பாதிக்கப்பட்டவரின் மகன் குற்றம் சுமத்தியுள்ளார்.
சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட இளைஞர் மேலும் தெரிவிக்கையில்,
கடந்த 10ஆம் திகதி எனது தந்தையின் பணம் களவாடப்பட்டது. இது குறித்து முறைப்பாடு பதிவு செய்வதற்கு வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையம் சென்றோம்.
அதிகாரிகள் அசமந்தம்
சம்பவம் நடந்த இடத்தை பார்வையிட்ட வட்டுக்கோட்டை பொலிஸார் அது இளவாலை பொலிஸ் பிரிவுக்குள் வரும் என கூறினர்.
ஆகையால் நாங்கள் இளவாலை பொலிஸ் நிலையத்திற்கு பி.ப 3.00 மணியளவில் சென்றோம். எங்களை 6.00 மணிவரை காக்க வைத்ததுடன் முறைப்பாடு பதிவு செய்யாமல் ஒரு வெற்றுக் கடிதாசியில் குறித்து வைத்துவிட்டு எங்களை திருப்பி அனுப்பினர்.
களவு எடுத்த நபர் துவிச்சக்கர வண்டியை விட்டுவிட்டு தப்பிச்சென்றார். அந்த துவிச்சக்கர வண்டியின் இலக்கம் யாருடைய பெயரில் பதிவில் உள்ளது என்பதை வைத்து நடவடிக்கை எடுக்துமாறு கூறி பொலிஸார் தன்னை மிரட்டியதாக அவர் கூறினார்.
எமது பணம் தொலைந்தது தொடர்பாக இதுவரை முறைப்பாடு பதிவு செய்யவும் இல்லை, பணத்தை கண்டுபிடித்து கொடுப்பதற்கு பொலிஸார் முயற்சிக்கவும் இல்லை என இளைஞன் குற்றம் சாட்டினார்.
அதேவேளை அண்மை காலமாக இளவாலை பொலிஸாரின் இவ்வாறான முறைகேடான செயற்பாடுகள் இடம்பெற்று வருகின்ற நிலையில் உயர் அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்காமல் உள்ளதாக பிரதேசவாசிகள் விசனம் வெளியிட்டுள்ளனர்.