என்னை விஷம் வைத்து கொன்று விடுங்கள்.....பிரபல நடிகர் வெளியிட்ட பரபரப்பு வீடியோ!
தென்னிந்திய திரை உலகில் பிரபல நடிகர் பாலா, இவர் இயக்குனர் சிறுத்தை சிவாவின் சகோதரரர். தமிழில் அன்பு , அப்பா அம்மா செல்லம், அஜிதின் தம்பியாக வீரம் படித்திலும் நடித்திருந்தார், இவர் தற்போது வெளியிட்டிருக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
இவருக்கும் பாடகி அம்ருத்தா என்பவருக்கும் 2010 ஆம் ஆண்டில் காதல் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஒரு மகளும் பிறந்துள்ளார். திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, இருவரும் விவாகரத்து பெற்றனர்.

உண்மைகள் அனைத்தும் வெளியே வரும் போது, உங்களுடைய முகமூடி கிழியும்
பின்னர் கோகிலா என்பவரை பாலா திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் , அவரது முன்னாள் மனைவி பாலா குறித்து பல அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வரும் நிலையில், நடிகர் பாலா ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில்,
“என்னால் முடியவில்லை எனக்கு விஷம் கொடுத்துக் கொன்றுவிடுங்கள்” என்று பேசி இருக்கிறார். பத்து வருடங்களாக என்னை வதைத்துக் கொண்டிருக்கிறார்கள். சட்டத்தின் பெயரால் எனக்கூறி பத்து வருடங்களாக ஒரு மனிதனை இப்படி வதைத்துக் கொண்டிருக்கிறார்கள். . என்னால் அதைச் சொல்ல முடியவில்லை. காரணம் நான் தான், நானே தான். நான் அதைச் சொல்லக் கூடாது.
எவ்வளவு சங்கடங்கள் இருந்தாலும், அதை மனதிற்குள் வைத்துக் கொண்டு, சிரித்துக் கொண்டே இருக்க வேண்டும். அப்படித்தானே? ஊடகங்கள் நல்ல விஷயங்களையும் செய்கின்றன. நல்ல நல்ல காரியங்களை இன்னும் மக்களிடம் கொண்டு சேர்க்கின்றன.
சில உண்மைகளை வெளியே கொண்டு வருகின்றன. சில போலித்தனங்களையும் அம்பலப்படுத்துகின்றன இனிமேலும் என்னை வதைத்தால், நான் எல்லாவற்றையும் வெளிப்படையாகப் பேசிவிடுவேன்.
எல்லா உண்மைகளும் வெளியே வரும். இது நடக்கும், எழுதி வைத்துக் கொள்ளுங்கள், இது கண்டிப்பாக நடக்கும். உண்மைகள் அனைத்தும் வெளியே வரும் போது, உங்களுடைய முகமூடி கிழியும். யாரும் வருத்தப்பட வேண்டாம், என்னை மன்னியுங்கள்” என நடிகர் பாலா தெரிவித்துள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.