கொழும்பு மாவட்டத்தில் மஹிந்த சாதனையை முறியடித்த பிரதமர் ஹரிணி அமரசூரிய!
2024ஆம் ஆண்டு இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தியிலிருந்து கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்ட பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய 655,289 விருப்பு வாக்குகளைப் பெற்று கொழும்பு மாவட்டத்தில் முதலிடம் பெற்றுள்ளார்.
இந்த எண்ணிக்கையான வாக்குகள் இலங்கையின் பாராளுமன்றத் தேர்தல் வரலாற்றில் ஒரு வேட்பாளர் பெற்ற அதிகூடிய வாக்குகளாக வரலாற்றில் இடம் பெற்றுள்ளது.
இதன் மூலம் இவர் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கொழும்பில் பெற்ற வாக்குகளை விட அதிகமாக பெற்றுள்ளார். ம்ேலும் 2020 இல் கொழும்பில் மகிந்த ராஜபக்ச 527,364 வாக்குகளை பெற்றிருந்த நிலையில் பிரதமர் ஹரிணி அதனை முறியடித்துள்ளார்.
இந்நிலையில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அதனை முறியடித்து 6 லட்சத்திற்கும் அதிகளவான விருப்பு வாக்குகளை பெற்று கொழும்பு மாவட்டத்தில் முதலிடம் பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதன் மூலம் இவர் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கொழும்பில் பெற்ற வாக்குகளை விட அதிகமாக பெற்றுள்ளார்.