இலங்கை வந்த இந்திய உயர்மட்ட குழு கோட்டாபயவிடம் வழங்கிய உறுதிமொழி
இலங்கையின் விரைவான பொருளாதார மீட்சிக்கு உதவுவதற்கு இந்தியா தயார் wஇலையில் உள்ளதாக இலங்கைக்கு வந்துள்ள இந்திய உயர்மட்ட குழுவினர் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவிடம் தெரிவித்துள்ளனர்.
இதனை இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் அரிண்டம் பக்ஷி (Arindam Bagchi, )தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார். அதில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,
இந்திய வெளிவிவகார செயலாளர் வினய் மோகன் குவாத்ரா இலங்கை ஜனாதிபதியை சந்தித்தார். இந்த சந்திப்பில் வெளிவிவகார செயலாளருடன் இந்திய நிதியமைச்சின் செயலாளர் அஜய்சேத் மற்றும் பிரதம ஆலோசகர் வி ஆனந்த நாகேஸ்வரன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
இதன்போது இலங்கையின் தற்போதைய நிலை மற்றும் இந்தியாவின் உதவி குறித்து ஆக்கபூர்வமான பேச்சுக்கள் இடம்பெற்றன,முதலீடுகளை ஊக்குவித்தல் இணைப்பு மற்றும் பொருளாதார இணைப்புகளை வலுப்படுத்துதல் மூலம் இலங்கையின் விரைவான பொருளாதார மீட்சிக்கு உதவுவதற்கு இந்தியா தயாராகவுள்ளது என்பதையும் இந்திய குழுவினர் வலியுறுத்தினர்.
அத்துடன் இந்தியாவின் அயல்நாடுகளிற்கு முன்னுரிமை என்ற கொள்கைக்கு இலங்கை எவ்வளவு முக்கியமானது என்பதும் இந்த சந்திப்பில் வலியுறுத்தப்பட்டது.
இரு தரப்பும் உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கான அர்ப்பணிப்புகள் குறித்து இதன்போது பேசப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.