தயவு செய்து நிறுத்துங்கள்; புற்றுநோயால் பாதிக்கப்பட்ட உக்ரேனிய குழந்தைகளின் உருக்கமான கோரிக்கை!
ரஷ்ய ஷெல் தாக்குதல்களுக்கு எதிராக பாதுகாப்பிற்காக உக்ரேனிய மருத்துவமனைகளின் அடித்தளத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட புற்றுநோய் நோயாளி உக்ரேனிய குழந்தைகள் போரை நிறுத்துமாறு கேட்டுக் கொண்டுள்ளதாக கூறியுள்ளமை பலரையும் கலங்கவைத்துள்ளது.
620 படுக்கைகளில் இருந்து ஆண்டுதோறும் 20,000 குழந்தைகளுக்கு சிகிச்சை அளிப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனை , உக்ரைனில் உள்ள மிகப்பெரிய குழந்தைகள் மருத்துவமனையான கிய்வில் உள்ள ஓமத்டிட் குழந்தைகள் மருத்துவமனை அதன் இணையதளத்தில் தெரிவித்துள்ளது.
"நாங்கள் சிகிச்சையை நிறுத்தினால் அவர்கள் இறந்துவிடுவார்கள்," லிசியா லிசியா, ஓன்கோ கண் மருத்துவர் கூறியுள்ளார்.
Little cancer patients in Kharkiv basement. These are unfit conditions for children who suffer enough as it is already! #SaveKharkiv #NoFlyZoneOverUkraine pic.twitter.com/FtnGnFjRLs
— Lesia Vasylenko (@lesiavasylenko) March 1, 2022
“அவர்களின் சிகிச்சையை எங்களால் நிறுத்த முடியாது. அவர்கள் ஒவ்வொரு நாளும் புற்றுநோயை எதிர்த்துப் போராடுகிறார்கள் எனவும் அவர் வேதனையுடன் கூறியுள்ளார்.
அத்துடன் "நாங்கள் ஒரு நாளைக்கு ஐந்து ஆறு முறை கீழேயும் மேலேயும் ஓடுகிறோம்." " ஆனால் முக்கிய சிகிச்சைகள் (கீமோதெரபிகள்) உள்ளிட்ட மருத்துவ பொருட்கள் குறைந்து வருகின்றதாகவும் அவர் கவலை வெளியிட்டார்.
மேலும் முக்கிய உபகரணங்கள் இல்லாமல் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு சிகிச்சை அளிப்பது சவாலானது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.