அரைச்சதத்தை கடந்த இலங்கை அணியின் வீரர்
இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான மூன்றாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் பெத்தும் நிஸ்ஸங்க அரைச்சதம் கடந்தார்.
கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் இடம்பெறும் இன்றைய போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலிய அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
இதற்கமைய, முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 06 விக்கெட்டுக்களை இழந்து 291 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
அணிசார்பில் ட்ராவிஸ் ஹெட் 70 ஓட்டங்களையும், ஆரோன் பிஞ்ச் 62 ஓட்டங்களையும், அலெக்ஸ் கேரி 49 ஓட்டங்களையும், க்ளென் மெக்ஸ்வெல் 33 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
பந்துவீச்சில் இலங்கை அணியின் ஜெப்ரி வெண்டர்சே 49 ஓட்டங்களுக்கு 03 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.
இந்நிலையில், 292 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடி வரும் இலங்கை அணி சற்று முன்னர் வரை 24.1 ஓவர்கள் நிறைவில் ஒரு விக்கெட்டை இழந்து 138 ஓட்டங்களை பெற்றுள்ளது.