நடுவானில் பறந்துக்கொண்டிருந்த விமானத்தில் ஏற்பட்ட பரபரப்பு
சர்வதேச விமான நிலையம் ஒன்றில் பணியாற்றும் பெண் ஒருவரிடம் அத்துமீறிய போதை ஆசாமி கைது செய்யப்பட்டுள்ளார்.
இச் சம்பவம் அமிர்தசரஸ் விமான நிலையத்தில் இடம்பெற்ற நிலையில் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
துபாயிலிருந்து புறப்பட்ட இண்டிகோ விமானம் ஒன்று பயணிகளை ஏற்றிக் கொண்டு பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் விமான நிலையத்திற்கு இன்றைய தினம் (15-05-2023) அதிகாலை 3.30 மணிக்கு வந்தது.
விமான நிலையில் விமானம் வந்து இறங்கிய பின்னர், அதிலிருந்த நபரொருவர் விமான பணிப்பெண்ணை பாலியல் ரீதியில் துன்புறுத்தியுள்ளார்.
இதையடுத்து அளிக்கப்பட்ட முறைப்பாட்டின் பேரில் விமான நிலைய அதிகாரிகள் சம்பந்தப்பட்ட நபரை பிடித்து விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.
இதில் அவர் ஜலந்தர் மாவட்டம் கோட்லி என்ற கிராமத்தை சேர்ந்த ரஜிந்தர் சிங் என்பது தெரியவந்தது. மேலும் அவர், மது அருந்தி விட்டு சக பயணிகளை துன்புறுத்தியுள்ளார்.
விமானம் புறப்பட்டபோதே மது அருந்துவதை ஆரம்பித்த ரஜிந்தர் சிங் பின்னர் சக பயணிகளிடமும், அதைத்தொடர்ந்து அதை கண்டித்த விமான பணிப் பெண்ணிடமும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
மேலும் அந்த பெண்ணிடம் தவறாக நடந்துகொள்ள முயற்சி செய்திருக்கிறார். இதனால் விமானத்தில் சலசலப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில் ரஜிந்தர் மீது வழக்குப் பதிவு செய்துள்ள விமான நிலைய அதிகாரிகள் அவரை நீதிமன்ற காவலுக்கு கொண்டு சென்றுள்ளனர்.
ரஜிந்தர் மீது இந்திய தண்டனை சட்டம் பிரிவுகள் 354 மற்றும் 509 ன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.