கனடாவில் புலம்பெயர்ந்தோர் எண்ணிக்கையை குறைக்க திட்டம்
பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் அரசாங்கம் ஒரு தசாப்தத்திற்கும் மேலான காலப் பகுதியின் பின்னர் முதன் முறையாக நாட்டிற்குள் அனுமதிக்கும் புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கையை கடுமையாக குறைக்கும் திட்டத்தை வெளியிட்டது.
அதன்படி, கனடா தனது வருடாந்திர நிரந்தர-குடியிருப்பு இலக்கை அடுத்த ஆண்டு சுமார் 395,000 ஆக குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது கடந்த ஆண்டு நிர்ணயித்த அரை மில்லியனாக இருந்த முந்தைய இலக்கை விட 21% குறைவாகும்.
அதன்படி, கனடா 2025 இல் 395,000 புதிய நிரந்தர குடியிருப்பாளர்களையும், 2026 இல் 380,000 குடியிருப்பாளர்களையும், 2027 இல் 365,000 குடியிருப்பாளர்களையும், 2024 இல் 485,000 குடியிருப்பாளர்களையும் குறைக்கும் என்று கனேடிய அரசாங்க ஆதாரங்களை மேற்கொள்காட்டி செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
குடிபெயர்ந்தோர் வீட்டு நெருக்கடி முதல் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு வரை கனடா அண்மைக்காலங்களில் கடும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது.
இதேவேளை, கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவை பதவியில் இருந்து விலகுமாறும் கடும் அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகிறது.